பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

-12-

அடிப்படையாகக்‌ கொண்டு நிகழுமாகலின்‌ மொழிக்‌ கொடையும்‌ அவற்றுக்‌ கேற்பவே நிகழ்ந்திருக்கும்‌. மேலும்‌, இனப்பரவலால்‌ நாகரிகமும்‌, பண்பாடும்‌ பரவுமாகவின்‌, அவ்வகையினும்‌ மொழிக்கொடை நிகழும்‌. அதே முறையில்‌ இனக்கலப்பின்‌ வழியாக மொழிக்கலப்பும்‌ நேரும்‌.

5: 2: மொழிக்கலப்பு என்பது தமிழ்மொழியைப்‌ பொறுத்த அளவில்‌ மொழிக்‌ கடன்‌ அன்று. இல்லாத ஒன்றைப்‌ பெறுவதே கடன்‌ ஆகுமாகலின்‌, தமிழ்மொழியில்‌ வந்து கலந்த சொற்கள்‌ இல்லாமையின்‌, தேவையால்‌ கடன்‌ வாங்கப்‌ பெற்றவையல்ல. தமிழ்மொழி மொழிக்‌ கடன்‌ பெறும்‌ அளவிற்கு வறுமையுற்ற மொழியில்லை. அஃது ஒரு நிறை மொழி; சொற்‌ செல்வ மொழி. எனவே, தமிழ்மொழி பெற்றது கடனன்று; கலப்பே யாகும்‌. இக்‌ கலப்பும்‌ அரசு மாற்றத்தாலும்‌ இன மேலீட்டாலும்‌ (ஆதிக்கத்தாலும்‌) ஏற்பட்டதாகும்‌.

6 : 0 ஆரசு மாற்றமும்‌ இனமேலீடும்‌:

6: 1: தமிழினத்தைப்‌ பொறுத்த அளவில்‌ அரசு மாற்றமும்‌ இனமேலீடும்‌, தமிழ்க்குமுகாயத்தைப்‌ பெரும்‌ சிதைவுகளுக்


சமசுக்கிருதம்‌ : அம்மா - அம்பா, நாவாய்‌ - நெள, மெது - மருது, கத்து(கத்தி)-க்ருத்‌,பொறு - பர்‌, துருத்து - தூத்‌ மாது - மாத்ரு (பெண்‌) (தாய்‌)

இலத்தீனம்‌ : பொள்‌ - பொர்‌, வலி - வலி, முழுகு -மெர்கு, பொறு - பெர்‌, வலம்‌ - வேலர்‌, மடி - மொரி விடலை - வித்ல விழி- விதெ பார்‌ - பரெ

கிரேக்கம்‌ : மாத்திரை - மேத்ரு காண்‌ - க்னோ இலக்கம்‌ - லியூக்கோஸ்‌ அல்‌ - அன்‌ - அன்‌ கணு - கொனு நாவாய்‌ - நெளஸ்‌ கும்‌- சிம்‌

- வடமொழி வரலாறு - பாவாணர்‌