பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-13- குள்ளாக்கி யிருக்கின்றன. அச் சிதைவுகளுள் எல்லாம் தலையாயது மொழிச்சிதைவே யாகும். இச்சிதைவு சீரழிவு என்று கூறுமளவிற்குப் பெருத்த மாற்றத்தை மொழி நிலையில் ஏற்படுத்திவிட்டது என்று சொன்னாலும் மிகை யில்லை. இதற்குத் தமிழ் மக்களின் மடித்துயிலும், அக்கறையின்மையும், இரக்கவுணர்வும். ஒற்றுமையின்மையும் கரணியங்களாகும். அரசு மாற்றத்தாலும் இனமேலீட்டாலும் ஏற்பட்ட பிற இழப்புகள் வரலாற்றுச் சிதைவும், இனமேம்பாட்டுக் குறைவும், குமுகாய இழிவும், மூட நம்பிக்கைப்பித்தமும், இன அடிமையும், அரசிழப்பும் ஆகும். எனவே இவற்றினின்று தமிழினத்தை மீட்டா லொழிய மொழிக்கலப்பையும் சிதைவையும் சீரழிவையும் தடுத்து நிறுத்தவே முடியாது.

7 : 0 மொழிச்சிதைவே தலையாய வளர்ச்சித் தடை :

7 : 1 : கடன் பெறுதல் ஏழைக்கு வளர்ச்சியையும், செல்வர்க்குத் தளர்ச்சியையும் தருவதாகும்.5 எனவே



5.அமுல், அலமாரி, அசல், அந்தஸ்து, அம்பாரி, அத்தர், அலாதி, அனாமத். அமீனா, இலாக்கா, இனாம், உஷார், உறுமால், கஜானா, கச்சேரி, கம்மி, கவுல், கறார், காபரா, கிச்சடி, கித்தான், குஸ்தி, குல்லா, குல்கந்து, கைதி, கொத்தவால், சால்வை, சிபாரிசு, ஜதை, ஜாலி, ஜாமீன், ஜிமிக்கி, ஜோக்கு, ஸவாரி, ஸபாஸ், சலாம், சவால், சிப்பாய், சொக்கா, சொகுசு, சோம்பு, டப்பா, டமாரம், டப்பாசு, டப்பி, டபாய்த்தல், டபேதார், டம்பம் டவாலி, டஜன், டானா, டாம்பீகம், டால், டிங்கி, டிமிக்கி, டேரா, டோலக், தஸ்தாவேஜூ, தபால், தர்பார், தகரார், தண்டால், தமாஷ், தயார், தாகீத், தாவா, தாலுகா, தாக்கல், திவான், திவால், துப்பட்டா, தோலா, நகல், நகாஸ், நபரி, நவாபு, நமூன, நாஜர், நாஷாக், நாடா, நிஜார், பக்கா, பக்கிரி, பங்கா, பங்கி, பஞ்சாயத், பந்தோபஸ்து, பஸ்லி, பட்டா, பரவாயில்லே, பலே, பல்டி, பர்பி, படே, பவுஷ், பஜார், பாரா, பாக்ஷா, பாதுஷா, பிராது, புகார், பேஜார், பேட்டி, பேஷ், பைசல், பைல்வான், மஹால், மனு,