பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/17

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-16-இன்னுஞ் சொன்னல் அதன் மொழிவளர்ச்சியைத் தடுத்து, அதன் இனத்தையும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம் முதலிய மொழியினங்களாகப் பிரிவுறச் செய்தது. மொழிக் கலப்பு நேர்ந்திருக்கவில்லையானால், இந்தியாவின் பேரினம தமிழினமாகவே இன்றுவரை இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், மொழிக்கலப்பும் ஒலிக்கலப்புமன்றோ தமிழினின்று மலையாளம், தெலுங்கம், கன்னடம், துளுவம், குடகம், துடவம், கோத்தம், கோண்டி, கொண்டா, கூய், ஒரா ஒன், இராசமகால், பிராகுவீ, குருக்கு, குவீ, பர்சி, கடபம், மாலத்தோ, நாய்க்கீ, கோலமி முதலிய மொழிகள் பிரிந்து வழங்க வழி வகுத்தன.

8; 2: இனத்திரிபுக்கு முன்னே நேர்வது மொழித்திரிபே! இனத்திரிபால் ஒர் இனத்தின் மக்கள் பரப்புக் குறைவது போலவே, மொழித்திரிபால் ஒரு மொழியில் உள்ள சொற் பரப்பும் குறையும் இது மொழி வளர்ச்சியைப் பல்லாற்றானும் பெரிதும் தடைப்படுத்துவதாகும். குறைவுள்ள மொழிக்கு மொழிக் கலப்பு நிறைவு தரலாமேயன்றி, நிறைவுள்ள ஒரு மொழிக்குக் குறைவு தருவதுடன் கேடு விளைவிப்பதுமாகும். முலைப்பால் இல்லாத ஒரு முழு மலடி வேண்டுமானல் தன் வளர்ப்புக் குழந்தைக்கு விலைப்பாலைப் புகட்டலாம். முலைப்பால் உள்ள ஒரு நற்றாய் எதற்குத் தன் குழந்தைக்கு விலைப்பாலைப் புகட்டல் வேண்டும்? அவ்வாறு வீம்புக்காகப் புகட்டுவது அவளுக்கும் அக்குழந்தைக்குமே கேடு தருவதாகும். எனவே, மொழி வளர்ச்சிக்கு முதல் தேவையானது, அதன் மொழிக்கலப்பற்ற தன்மையே என அறிந்து கொள்க.

9: 0: மொழிக்கலப்பும ஒலிக் கலப்பும் : மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்தமையால் தமிழினத்தின் ஒரு பகுதியினமும் தமிழ் மொழியுள் ஒரு பகுதிச் சொற்களும் மொத்தத் தொகையினின்று குறைந்துபோனதை ஒர்க.