பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/21

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20


12 : 1: இலக்கியத்தில்‌ மொழியாளுமை:

12 : 1: மொழியும்‌ இலக்கியமும்‌ உயிரும்‌ உடலும்‌ என்று கண்டோம்‌. ஆனாலும்‌, உயிரோடு உடல்‌ இயங்குகையில்‌ உயிர்ச்‌ சிறப்பை உடல்‌ எண்ணிப்‌ பாராமலும்‌, உயிருக்கு நேரும்‌ ஊறுபாடுகளை முன்‌ நினையாமலும்‌, அக்கறையின்றித்‌ தன்‌ விருப்பப்படி தாறுமாறாகச்‌ சிற்சில நேரங்களில்‌ இயங்கி, உயிரை வருந்தச்‌ செய்வது போல்‌, மொழிக்கு நேரும்‌ ஊறுபாடுகளை எண்ணிப்‌ பாராமல்‌ இலக்கியவாக்கமும்‌ சிற்சிலகால்‌, சிலரால்‌, தட்டுக்கெட்டுத்‌ தடுமாறி, மொழிக்குச்‌ சிதைவை ஏற்படுத்துகின்றது. அக்கால்‌ மொழி வளர்ச்சி குன்றவே இலக்கிய வளர்ச்சியும்‌ குறைவுபடுகின்றது. ஆனால்‌, உடற்‌ சிதைவையும்‌ உயிர்ச்‌ சிதைவையும்‌ உணர்ந்து கொள்ளாமல்‌, மேலும்‌மேலும்‌ நம்‌ விருப்பப்படியே நாம்‌ நடந்து கொள்வதைப்‌ போலவே, மொழிச்‌ சிதையையும்‌, இலக்கியச்‌ சிதைவையும்‌ உணராமலேயே சிலர்‌ மேலும்‌மேலும்‌ தம்‌ மனம்‌ போனபடியெல்லாம்‌ இலக்கியத்தை ஆளுவர்‌. அனால்‌, நோய்த்‌ தன்மையை மருத்துவர்‌ ஒருவர்‌ உணர்ந்து எச்சரிப்பதுபோல்‌ மொழிச்‌ சிதைவையும்‌ அத்துறை வல்லுநர்களே அறிந்து எச்சரிக்கை செய்ய முடியும்‌. அவ்வெச்சரிக்கை புறக்கணிக்கப்படும்‌ பொழுது இருவழியும்‌ சிதைவுகள்‌ மிகுதியாகி, உடல்‌ அழிந்துபடுவதைப்‌ போல்‌ இலக்கிய வளர்ச்சியும்‌ அழிந்து படுகின்றது. இலக்கிய வளர்ச்சி அழியவே மொழிநிலையும்‌ அழிவுறுகின்றது. இதனால்‌ இலக்கியவாக்கத்தில்‌ மொழி யாளுமை எவ்வகையில்‌ அளாவி நிற்கவேண்டும்‌ என்பதை நன்கு அறிந்து கொள்க. மொழிச்‌ சிதைவை உண்டாக்குகின்ற இலக்கிய வாக்கம்‌ அதன்‌ வளர்ச்சி நிலைக்கே கேடு செய்கிறது எனலாம்‌.

13 : 0: இலக்கியத்தின்‌ சிறப்பியல்புகள்‌:

13 : 1: இனி, இலக்கியம்‌ என்பது என்ன என்பது பற்றியும்‌,