பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-21-


அதன் சிறப்பியல்புகள் பற்றியும் ஒரு சிறிது எண்ணிப் பார்ப்போம்.

13 : 2 “சிறந்த அறிவுணர்ச்சி சிறந்த எண்ணம் சிறந்த மொழிவுயிர்ப்புடன், சிறந்த பொருள் நிலையைப்பற்றி வெளிப்படும் சிறந்த அமைப்பே இலக்கியமாகும்”. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், “ ஓர் உள்ளம் மொழிவழியாக இன்னோர் உள்ளத்தில் போய் கரைந்துவிடும் நிலையே இலக்கியம்” ஆகும். இன்னமும் சுருங்கச் சொல்வதானால், “உள்ளத்தின் காலடி இலக்கியம்”.

13 : 3: இலக்கியத்தின் புறவவடிவங்கள் பலவாகலாம். அவை இசையாகவும் இருக்கலாம்: இயலாகவும் இருக்கலாம். நாடகமாகவும் இருக்கலாம். இனி இவையுங்கூட பல உருவமாக விருக்கலாம். எதுவாக இருப்பினும் உண்மை இலக்கியத்திற்க்கு பிறப்புண்டு;இறப்பில்லை. இலக்கியத்தில் உள்ளம் படிகின்றது; நுகருகின்றது. உறக்கம் கொள்கின்றது: தன் வாழ்க்கைக் களப்பைப் போக்கிக் கொள்கின்றது. இறுதியில் அதைப் பற்றிக் கொண்டு தன்னோடு உறைய வைத்துக் கொள்கின்றது.

13 : 4: இலக்கியமில்லாத மொழி விளைவற்ற கறம்பு நிலம்போல் காட்சியளிக்கும். மக்களுக்கு உள்ளச் செழுமை ஊட்டுவது இலக்கியமே! உண்பதும் உடுப்பதும், உழைப்பதும் உறங்குவதுமாகக் கிடந்தலும் வறட்சி வாழ்க்கையில் இலக்கியம் பசுமையையும், மணத்தையும் பரவச் செய்து கிளர்ச்சியை உண்டாக்குகின்றது. அது கடந்த காலத்தை நினைவூட்டி, நிகழ் காலத்தை ஒரு பிடிப்புள்ளதாக்கி, எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்கின்றது. மக்களின் உள்ளம் கட்டுப்பாடற்ற காட்டு மாடாய்த் தட்டுத் தடுமாறிப் போகாமல் இருக்க, இலக்கியம் முட்டுக் கொடுத்து அதனைத் தடுதாள்கின்றது. மாந்தனின் மருடு மருடான போக்கை வழவழப்புடையதாக்கி அவன் உள்ளத்தில் அறவுணர்ச்சியையும்