பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



-22-



மெய்யறிவுணர்வையும்‌ பாய்ச்சுகின்றது. இலக்கியம்‌ உணராதவன்‌ கள்ளம்‌ சிடுசிடுப்பு நிறைந்ததாகிப்‌ பல சிக்கல்களை எதிர்நோக்கத்‌ தகுதியற்றதாகப்போய்ச்‌ சில நோங்களில்‌ தொய்ந்தும்‌ போகின்றது. ஆனால்‌ இலக்கிய வுணர்ச்சி நிறைந்தவனின்‌ உள்ளமோ எதையும்‌ தாங்கிக்‌ கொள்ளும்‌ ஆற்றல்‌ பெற்றதாகி, எத்தகைய இடர்ப்பாட்டுக்கும்‌ ஈடுகொடுக்கும்‌ வலுவடையதாகச்‌ செய்து கொள்கின்றது. பொறியியக்கம்‌ உடையது போன்ற வாழ்வை உயிரியக்கம்‌ நிறைந்ததாகச்‌ செய்து தருவது இலக்கிய வுணர்வே!

13 : 5: ஆனால்‌, இக்கால்‌, கடலுக்குள்ளும்‌ ஏற்படும்‌ உள்ளரிப்புகளைப்‌ போல்‌, இலக்கிய மொழி நடையிலும்‌ சில தொய்வுகள்‌ ஏற்பட்டு வருகின்றன. இவை இயற்கையாக ஏற்பட்டு வருவனவாகக்‌ கொள்ள முடியாது. செயற்கையாக சில உள்நோக்கங்களுக்காக - அல்லது அறியாமை அடிப்படையாக - சிலர்‌ வேண்டுமென்றே செய்யும்‌ உள்‌ தோண்டுதல்‌ வேலை என்றே சொல்லுதல்‌ வேண்டும்‌. இல்லெனில்‌, அவை சுட்டிக்‌ காட்டப்‌ பெற்ற பின்னும்‌ தொடர்ந்து செய்யப்‌ பெற்று வருமா? மொழி வளர்ச்சியை விரும்புவோர்‌ முதலில்‌ இத்தகைய உள்ளரிப்புகளை இனங்கண்டு கொள்ளுதல்‌ வேண்டும்‌. இந்த உள்ளரிப்புக்‌ காரர்கள்‌ மக்களை நேரிடையாக இலக்கிய உலகுக்கு அழைத்து வருவதாகச்‌ சொல்லியே அவற்றைச்‌ செய்து வருகின்றார்கள்‌. மொழி என்பது அவரவர்‌ விரும்புகிறபடி யெல்லாம்‌ கட்டமைத்துக்‌ கொள்ளும்‌ ஒரு தனிநிலைக்‌ கோட்பாடு அன்று. தனியான ஒருவனுக்கு மொழி தேவையில்லை. எனவே மொழி எல்லாருக்கும்‌ பொதுவான ஓர்‌ இயற்கை விளைவு ஆகும்‌. அதைத்‌ தனியான ஒருவன்‌ அவனின்‌ மனக்‌ கோணல்‌ மாணல்களுக்குத்‌ தக்கபடி சிதைத்துக்‌ கையாளுதல்‌ குமுகாயக்‌ கொடுங்‌ குற்றமாகும்‌. அவன்‌ அதைப்‌ பிறர்‌ பொருட்டே கையாளுதல்‌ வேண்டுமாகலின்‌, பிறரின்‌ மரபு நிலைப்படி அவனும்‌ அதைக்‌ கட்டிக்‌ காத்தல்‌ அவனின்‌ தவிர்க்க முடியாத்‌