பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-24-

கருதுகிறோம்‌. மற்றபடி சொல்லில்‌ கடுமையோ எனளிமையோ என்பவெல்லாம்‌ வெற்று மயக்கமே!

13 : 8: மண்ணினால்‌ சுட்டப்பெறும்‌ வீடுகள்‌ கட்டுதற்கு எயவைதாம்‌. முயற்சியும்‌ குறைவுதான்‌. பரவலாகவும்‌ கட்ட இயல்கின்றவை, அவை. ஆனால்‌ அவற்றை தம்மில்‌ எவரும்‌ விரும்பாதது ஏன்‌? அவற்றின்‌ முயற்சி எளிமையையும்‌ செய்பொருள்‌ எளிமையையும்‌ போலவே, நிலைப்பும்‌ எளியதாகி விடுவதே! வெயிலுக்கும்‌, மழைக்கும்‌ ஈடு கொடுக்க முடியாமல்‌ அம்‌ மண்வீடுகள்‌ விரைவில்‌ சிதைந்து போவதில்லையா ? அப்படிப்‌ போன்றவைதாம்‌'எளிய' சொற்களால்‌ கட்டமைக்கப்‌ பெற்ற எளிய” இலக்கியங்களும்‌.

13 : 9: சென்ற இருபது முப்பது ஆண்டுகளுக்குமுன்‌ விரும்பிப்‌ படிக்கப்‌ பெற்ற வடுவூர்‌ துரைசாமியார்‌, ஆரணி குப்புசாமியார்‌ முதலியவர்களின்‌ புதினங்களை இன்று எத்தனை இளைஞர்கள்‌ அறிந்திருப்பர்‌? ஆனால்‌, அவை அக்காலத்தில்‌ செலுத்திய இலக்கிய மேலாண்மைகள்‌ எவ்வளவு தெரியுமா? புகழேந்திப்‌ புலவரின்‌ பாநடை தழுவிய கதை மாலைகளை இன்று எத்தனைப்‌ பேர்‌ படித்துச்‌ சுவைக்கின்றார்கள்‌. புறநானூறும்‌ திருக்குறளும்‌ கைகளில்‌ வைத்திருக்கும்பொழுதே நமக்கு ஒருவகைப்‌ பெருமையை அளிப்பது ஏன்‌? ஓமரையும்‌ மில்டனையும்‌ சேக்சுபியரையும்‌ இளங்கோவையும்‌ கம்பரையும்‌ எத்தனை ஊழிகளானாலும்‌ எவராகிலும்‌ அழித்துவிடமுடியுமா? காலந்தோறும்‌ அவை புதிதாக முளைத்து முளைத்துக்‌ காட்சி தருகின்றன என்பதை எவரேனும்‌ மறுக்க முடியுமா? - முடியாது - ஏன்‌? இங்கு தான்‌ மொழி நடையும்‌ சொற்கோப்பும்‌ இலக்கியவுணர்வைக்‌ கட்டிக்‌ காக்கும்‌ இறும்பூதைக்‌ கண்டு கொள்ளல்‌ வேண்டும்‌!

13 : 10: மொழிபற்றிக்‌ கவலைப்படாமல்‌, சொல்‌ லோட்டங்களைத்‌ தம்‌ கருத்தோட்டங்களுக்கு ஏற்பப்‌ பஞ்சு