பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-25-

போலாக்கிப்‌ பறக்கவிடுகின்ற இன்றைய எழுத்தாளர்களின்‌ கோபுர இலக்‌கியங்கள்‌, அடுத்து வரும்‌ ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில்‌, குப்பை மேடுகளுக்குப்‌ போகாமல்‌ காத்துக்‌ கொள்ளும்‌ ஆற்றல்‌ சான்றவை என்பதைக்‌ காலந்தான்‌ உறுதி செய்ய முடியும்‌.

13 : 11: எனவே, மக்கள்‌ வாழ்க்கைக்கு இலக்கிய வுணர்ச்சி மிகவும்‌ இன்றியாமையாததென்க. இனி, இத்தகைய இலக்கியவாக்கம்‌ செய்கின்ற ஓர்‌ இலக்கியப்‌ புலவனின்‌ மனநிலைகளைப்‌ பார்ப்போம்‌.

14 : 0 இலக்கியப்‌ புலவனின்‌ மனநிலைகள்‌:

14 : 1: இலக்கியம்‌ பெரும்பாலும்‌ மாந்தனின்‌ உள்‌ளுணர்ச்சிகளின்‌ தொகுப்பாக அமைவதால்‌, மனத்தின்‌ நெளிவு சுழிவுகளை யெல்லாம்‌ அதில்‌ பார்க்கலாம்‌. எப்பொழுதும்‌ மனத்தைத்‌ தாக்குவன மாந்தனின்‌ நிறைவேறாத ஆசைகள்‌, கரடு முரடான எண்ணங்கள்‌, மறைமுகமான ஏக்கங்கள்‌, பொறாமை உணர்வுகள்‌, பகைமை நினைவுகள்‌ முதலியவையே! அந்‌ நினைவுகளின்‌ புகைச்சல்களையும்‌ குமிழிகளையும்‌ ஓர்‌ உணர்வுப்‌ புலவனின்‌ பேரிலக்கியத்தில்‌ வரும்‌ உறுப்பினர்‌ படைப்புகளில்‌ பார்க்கலாம்‌. தன்‌ நிறைவேறாத ஆசைகளின்‌ வடிவங்களைக்‌ கற்பனையால்‌ அவனே படைத்துக்‌ கொண்டு, இலக்கிய வடிவில்‌ துய்க்கின்றான்‌. அவ்வகைக்‌ கற்பனை தலைமாறிப்‌ போகாமல்‌ உள்நின்ற ஒரு நடுநிலை உணர்வு அவனைக்‌ காக்கின்றது. சிற்சிலகால்‌ அவ்வுணர்ச்சி புறஉலகச்‌ குழல்களால்‌ தாக்குண்டு, அவ்விலக்கிய வுணர்ச்சியைக்‌ கட்டவிழ்த்து விடுகின்றது. அதுபொழுது அவனால்‌ படைக்கப்‌ படும்‌ இலக்கியங்களும்‌ படிப்பாரின்‌ அகவுணர்வைப்‌ பலவகையாலும்‌ அலைவுறச்‌ செய்கின்றன. எனவே, ஓர்‌ இலக்கியப்‌ புலவன்‌ தன்னை அ௧ நோக்காகவும்‌ கண்டு தெளியவும்‌ அவற்றின்‌ இழிவு சிறப்புகளைத்‌ தானே அறியவும்‌ ஆற்றல்‌ பெற்றவனாக விருத்தல்‌ வேண்டும்‌.