பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/33

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



-32-

பரப்புவதில்‌ ஒருவகை உள்நோக்கமும்‌ மக்களை ஏமாற்றும்‌ தன்மையும்‌ மிகுதியும்‌ கடைப்பிடிக்கப்‌ பெறுகின்றன. இலக்கிய உலகிலும்‌ அரசியல்‌ புகுந்து அதன்‌ உயர்ந்த நோக்கத்தைத்‌ திசை திருப்பிச்‌ செல்லுகின்றது. இடைக்காலத்துப்‌ பாலியல்‌ உணர்வோடு, மேனாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பெற்ற இழிவுணர்வும்‌ இரண்டறக்‌ கலந்து, இக்கால இலக்கியங்களில்‌ பரக்கக்‌ காணப்பெறுகின்றன. மனத்தைச்‌ செப்பப்படுத்தும்‌ இலக்கியத்தின்‌ உயர்ந்த உட்கொள்கை, புறத்தே தூக்கி யெறியப்‌ பெற்றுவிட்டது. அவ்வப்பொழுது எழும்‌ உடலுணர்ச்சிகளுக்கும்‌ வாழ்க்கையின்‌ மேடு பள்ளங்களுக்கும்‌ இக்கால இலக்கியத்தில்‌ ஏராளமான இடம்‌ ஒதுக்கப்‌ பெறுகின்றது. வாழ்க்கைத்‌ துயரங்களை மறந்து, மன மாசுகளைக்‌ களைந்தெடுக்கவே பயன்பட்டு வந்த இலக்கியங்கள்‌, இக்கால்‌ அவற்றை அப்பட்டமாக எடுத்துரைப்பதற்கே பயன்படுத்தப்‌ பெறுகின்றன. எனவே இவ்விலக்கியங்களைப்‌ படிக்கும்‌ ஒருவரின்‌ மனமாசுகளும்‌ வாழ்வுத்‌ துயரங்களும்‌ களையப்‌ பெறுவதற்கு மாறாக அவை மேலும்‌ அவர்‌ மனத்தில்‌ ஏறி நின்று, நினைவுப்‌ புயல்களை எழுப்பி, அவரை அடிக்கடி அலைக்‌ கழிக்கவே முற்படுகின்றன.

18 : 3 இக்கால்‌ இலக்கிய வரலாறுகள்‌, ஆய்வுரைகள்‌ எழுதுகின்ற புலவர்களும்‌ அந்த வீழ்ச்சியை வெளிப்படையாகச்‌ சுட்டிக்‌ காட்டுவதற்கே அஞ்சுவதுடன்‌, போலித்தனமாகவும்‌ விருப்பு வெறுப்புடனுமே அவற்றைக்‌ காசுக்காக எழுதித்‌ தள்ளுகின்றனர்‌. உயர்ந்த கல்லூரிகளில்‌ பணியாற்றும்‌ மொழிப்‌ புலவர்களிடையே கூடத்‌ தாய்மொழிப்‌ பற்று குதிரைக்‌ கொம்பாக விளங்குகின்றது. மொழியைக்‌ காட்டிக்‌ கொடுத்து அவர்கள்‌ பிழைக்கும்‌ தன்மைகளைப்‌ பார்த்தால்‌ எதிர்காலத்தில்‌ தமிழ்‌ இவர்கள்‌ கைகளிலேயே நசுக்குண்டு புதைந்து போகுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. அவர்கள்‌ இடைக்காலப்‌ புலவர்களைப்‌ போல்‌ பொருள்‌ நசைக்காகவே மொழி வாணிகம்‌ செய்வதாகப்‌