பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



-38-

திரைப்படங்களில்‌ உள்ள காட்சிகளையும்‌, கீழ்த்தரமான உரையாடல்களையும்‌ தணிக்கை செய்வதில்லையா? அக்கால்‌ உரிமை என்னாகின்றது? மேலும்‌ இலக்கியக்‌ குழு அறிவுறுத்துவது, இலக்கியத்தில்‌ உள்ள பிழைகளைத்‌ திருத்திக்‌ கொள்வகற்குத்தானே யன்றி, நூலின்‌ கருத்துகளை மாற்றச்‌ சொல்வதற்காக இல்லையென்பதை நாம்‌ நன்கு எண்ணிப்‌ பார்க்க வேண்டும்‌.

20 : 7: இனி, கருத்து, மொழி இவையிரண்டிலும்‌ கிறந்திலங்கும்‌ இலக்கியங்களுக்கு அரசு முழுத்‌ துணையாக இருந்து உதவுதல்‌ வேண்டும்‌. மாநில இலக்கியக்‌ கழகம்‌ மிக வுயர்வாகக்‌ கூறுகின்ற இலக்கியங்களை அரசே தன்‌ சார்பில்‌ வெளியிட்டு உதவி நூலாசிரியர்களை ஊக்குதல்‌ வேண்டும்‌. அத்தகைய நூலாசிரியர்களைப்‌ பொதுமன்றங்களும்‌ அழைத்துப்‌ பாராட்டிப்‌ பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தலைத்‌ தங்கள்‌ தலையாய தொண்டாகக்‌ கருதுதல்‌ வேண்டும்‌. இவ்‌ வழிமுறைகளைப்‌ பின்பற்றுவோமானால்‌, இன்னும்‌ இருபது ஆண்டுகளில்‌ தமிழ்மொழி வளர்ச்சியுறுவதுடன்‌, தூய்மையுற்று விளங்கி, அதன்வழி இலக்கிய வாக்கமும்‌ சிறந்திலங்கும்‌ என்பதில்‌ ஐயமே இல்லை.

20 : 8: எவ்வாற்றானும்‌ தமிழ்‌ வளர்ச்சி என்பது மொழி வளர்ச்சியே! மொழி வளர்ச்சி என்பதில்‌ அதன்‌ தூய்மையைப்‌ பேணுவதையே தலையாயதாகக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌. தூய்மையைக்‌ கட்டழிக்கும்‌ எந்த நிலையும்‌ மொழி வளர்ச்சிக்கு ஊறு செய்வதே யாகும்‌. சிலர்‌ மொழித்‌ தூய்மையை எள்ளல்‌ செய்கின்றனர்‌. சிலரோ பிற மொழிக்கலப்பால்‌ மொழி வளரும்‌ என்கின்றனர்‌. அவர்கள்‌ கலப்படக்காரர்களை யொத்த குற்றவாளிகளே! அவர்கள்‌ இரு தரப்பினரும்‌ தாய்மொழியைப்‌ பற்றிக்‌ கவலையுறாதவர்களே! தாய்மொழியைப்‌ பற்றிக்‌ கவலை யுறாதவர்கள்‌