பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

பட அனைவரும் கேட்கும் முறையில் உரைக்க லுற்றார்.

"பஞ்சபாண்டவர்களே ! நீ ங் க ள் நாட்டை ஆளும் நிலைமையை ஒழித்துக் காட்டிடமே உமக்கு உரிய இடமாகக் கொண்டு தவத்தை மேற்கொண் டீர்கள். இச் செயல் உங்கட்குச் சீரிய செயலாகும். அறிவீனர் தாம் நிலையற்ற செல்வத்தை விரும்பி, அத இனச் சின்னாள் ஆண்டு அனுபவித்துப் பின்னர் ஆறாத்துயரத்தில் ஆழ்வார். மேலும், கூறுவதைக் கேளுங்கள். எத்தனையோ பிறவிகள் இருக்க, அப் பிறவிகளில் எல்லாம் புகாமல் மானிடப் பிறவியில் பிறந்து வாழ்தல் இனிது. இங்ஙனம் மானிடராய்ப் பிறந்தாலும் உலக மாயையை ஒழித்து ஞானிகளாய் விளங்குதல் அருமையிலும் அருமை ஆகும். ஞானி களாகி விளங்கிய பின்னர் வீட்டின்பத்தை அடை தற்கான அறிவினைப் பெறுதல் அதனினும் அரிது. இந்த அருமைப் பாடுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் பெற்றுள்ளீர்கள். உம் பங்காளியான துரியன் உங்கட்குரிய நாட்டை அவன் கூறிய வாக்குப்படி கொடுக்கவும் மாட்டான். அவன் உங்களோடு ஒற்றுமை கொண்டு வாழவும் சம்மதியான், உங்களோடு போரிடவே துணிந் துள்ளான். ஆகவே, நீங்கள் உமக்குரிய தாய் பாகத்தை மறந்திடுங்கள். பழையபடி தவமேற் கொள்ளுங்கள். இத்தலம் உங்களுக்கு என்றும் அழி யாப் பேர் இன்ப உலகில் கொண்டு சேர்க்கும். துசி யன் முதலியோர் பேராசை யுடையவர்கள். சிறிதும் உள்ளத்தே அன்பில்லாதவர்கள். என்ன கூறினாலும்