பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


ஏற்பட்டக் களைப்பிலிருந்து விடுபடுகின்றன. வேலை செய்வதற்கேற்ற வேகத்தைப் பெறுகின்றன.

சுவாசம் எப்போது சீராக நடைபெறும்? நல்ல நினைவுகள் நெஞ்சத்தில் தோன்றும் போதும், அதன் தொடர்பாக நல்ல செயல்கள் நடைபெறும்போதும் தான். சுவாசம் சீரானது என்றால் உடல் சுமுகமாக இருக்கும்.

நெஞ்சில் தீய நினைவுகள் தோன்றுகிறபோது, சுவாசம் தடைபடுகிறது. தடுமாற்றம் அடைகிறது. அதனால், இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதனால் அடிப்படைச் செல்கள் அதிர்ச்சி அடைகின்றன. சுரப்பிகளில் குழப்பம். இதனால்தான், தீய சிந்தனையுள்ளவர்கள். தீய நெறியில் செல்பவர்கள், தீமையையே தேடிச் செல்பவர்கள் முகம் கறுத்துப் போய், இறுக்கமாகி விடுகின்றது. அருளற்ற இருள் முகமாக, காணச் சகிக்காத கண்றாவிக் காட்சியாக, முகம் ஆகிவிடுகிறது. இதன் காரணமாக, தீயவையை நினைக்கவே கூடாது என்பார்கள் நமது பெரியவர்கள்.

சுவாசத்தின் காற்றளவு குறைந்தாலும், சுவாசம் திசைமாறிப் போனாலும், அந்த மனிதனின் சுபாவமே மாறிப்போய்விடுகிறது. சுருதி பேதம் அடைகிறது.

எல்வபாவம் என்றும் இதைக் கூறலாம். குறிப்பிட்ட அந்த மனிதரின் குணநலம், குன்றிப் போய்விடுகிறது. சுபாவம் என்றால் இயல்பு, நல்ல குணம் என்று பொருளுண்டு.

சுவாசத்தில் மூன்று வகை உண்டு

1. தொண்டைக்குழி சுவாசம் (Throat Breathing)

தொண்டைக்கும் மூக்குத் துவாரங்களுக்கும் இடையே நடைபெறுகிறது. இப்படி சுவாசிக்கின்றவர்கள் குரல் பிசிறடிப்பதுடன் நலமும் அவ்வளவு தெளிவாக இருக்காது.