பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா13. தன்கையே தனக்குதவி

ஒரு தனியான சிந்தனை. ஆமாம், இது துணிவான சிந்தனைதான், தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற சிந்தனையின் தூறல் சிறு சாரல், தன்கையே தனக்குதவி என்ற பழமொழியை பேசாதவர்கள் இருக்கவே முடியாது. சந்தர்ப்பங்கள், வாழ்க்கைச் சூழல்கள், சுற்றுப்புறம், பழமொழியை அடிக்கடி நினைக்கத் தூண்டும் பேசவும் தூண்டும்.

அவரவர் வயிற்றுக்கு அவரவர் சாப்பிடத்தான் வேண்டும். மற்றவர்கள் இவருக்காக சாப்பிட முடியாது.

அவரவர் உயிர்வாழ அவரவர் சுவாசித்துத்தான் ஆகவேண்டும். மற்றவர் சுவாசித்தால் இருவருக்கும் மரணம் தானே!

அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் உழைத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், இந்த நாகரிக வாழ்க்கையின் நடைமுறை அப்படி அமையவில்லையே. உழைப்பவர் ஒருவர், அதன் பயனை அனுபவிப்பவர் ஒருவர்.

ஆனாலும், இந்தத் தன் கையே பழமொழி எதற்கு வந்தது?

தன் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவியாக அவரவர் கை தான் உதவும் என்பதற்காகவா! வாழ்க்கைப் பயணத்திற்குக் கால் தான் வேண்டும் நடக்க, ஓட, தாண்ட, குதிக்க, ஒளிய, ஓடிமறைய என்று நாம் சிந்திக்கும் போது இந்தப் பழமொழி