பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

101


பிறந்தது வேறு ஒரு அர்த்தத்திற்குத்தான் என்பது புரிகிறது. ஆனால் நமது அறிவார்ந்த மக்கள் அதை அவர்களின் செளகரியத்திற்காக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

கையின் பலத்தை வைத்துத்தான் ஒருவரது சக்தியை அறிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே மல்யுத்தக் காரர்கள் முதலில் எதிராளியின் கையைப் பிடித்துப் பார்க்க முயல்வார்கள் மற்றவரும் பிடிகொடுக்க மாட்டார்.

அந்தக் காலத்தில், போர் நேரத்தில் வில் அம்பு வீரர்கள் வலது கையால் நாணை பின்னுக்கு வேகமாக இழுத்து அம்பு விட்டனர். சாப்பிடும் போது கையை முன்னுக்கு கொண்டு வந்தனர்.

அதற்காக அவர்கள் சொல்லிய பழமொழி பந்திக்கு முந்திக்கொள் படைக்குப் பிந்திக் கொள் என்பதாக அது வலது கையைப் பார்த்துச் சொன்னது.

நம்மவர்கள் பந்தி என்றால் முந்தவும் படைக்கு என்றால் ஒடி ஒளிந்து கொள்ளவும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அது போலத்தான் இந்தக் கைப் பழமொழியும்.

தனக்காக செய்து கொள்கிற காரியங்களுக்கு, அதாவது சாப்பிட, பல்தேய்க்க, குளிக்க தலைவாரிக் கொள்ள, உடுத்திக் கொள்ள போன்ற அன்றாட காரியங்களுக்கு கை அவசியம் என்பதாகவே இந்தப் பழமொழியை அர்த்தமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் அதன் உட்பொருளை, ஆழமான பொருளை அவர்கள் அறிந்து கொண்டதாகவோ, புரிந்து கொண்ட தாகவோ தெரியவில்லை. காரணம் ஏன் என்றால் பல உண்டு.