பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


தன்கையே தனக்கு உதவி என்பதில் நாம் இரண்டு சொற்களை நன்றாகப் புரிந்து கொண்டாக வேண்டும்.

உதவி என்றும், உதவு என்றும் உள்ள சொற்களை நாம் முதலில் என்னவென்று பார்ப்போம். உதவு என்றால் துணை செய், சகாயமாயிரு என்று அர்த்தம்.

உதவி என்றால் துணை சகாயம் என்று அர்த்தம்.

இங்கே தன்கை, தனக்கு உதவுவதற்காக இருக்க வேண்டும் என்று தான் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கைதான் தனக்குத் துணையாக இருக்கவேண்டும் என்பதை நாம் நினைக்கவில்லை.

துணை என்றால் ஆதரவு. உடன் தொடரும் இணை என்று நாம் கொள்ளலாம். அப்படியானால் இந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம்? தன் கைதான்தன்னை கடைசி வரைக்கும் கொண்டு செல்லும் துணை என்பது தானே. இங்கே உள்ள கை என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள்.

ஒருவனுடைய ஒழுக்கம் தான் அவனுக்கு துணையாக, உதவியாக சகாயமாகத் தொடர்ந்து வாழ்விக்கிறது. வழிகாட்டுகிறது என்பதுதான் இந்தப் பழமொழிக்கு அர்த்தமாகும்.

ஒழுக்கம் எப்படி ஒருவரைக் காக்கிறது?

ஒழுக்கத்தை நாம் அக ஒழுக்கம், புற ஒழுக்கம் என்று இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம்.

அக ஒழுக்கம் என்பது சிந்தனையை மட்டுமல்ல, உள்ளுறுப்புக்களை ஒழுங்காகக் காத்து வளர்த்து ஒன்றாக செயல்படும் உற்சாகத்தை அளித்து செழிப்பாக, சிறப்பாக பணியாற்றச் செய்யும் பண்பான காரியங்கள். அதறகு ஒழுக்கமான வாழ்க்கை அமைப்பு தேவை.