பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 பயில் வான் என்று ஒருவர் சொன்னாலே போதும். உடனே நமக்கு கட்டுமஸ்தான தேகம் உள்ள ஒருவரின் உடல் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. - அதுதான் இயற்கை.


அதிலும் குஸ்தி போடுகிற அதாவது, மல்யுத்தம் போடுகிற ஒருவரின் தேகம் மட்டுமே கண் முகட்டில் தரிசனமாக வந்து நிற்கிறது.


பயில் வான் என்ற அந்த சொல், விளையாட்டுத் துறைக்கு சொந்தமானதாக ஆகியிருக்கிறதே! இல்லை இல்லை அதற்கே அது ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரம் கட்டப்பட்டிருக்கிறது. வாசனை என்று குறிக்க வந்த சொல், நாற்றம் என்பதாகும். அந்த சொல்லான நாற்றம், இன்று நாறுவதைக் குறிப்பதாகிவிட்டது. அதுபோலவே, பயிலுபவன் என்ற பொருளில் பேசப்பட்டு வந்த பயில்வான் என்ற சொல் இன்று சண்டை போடும் ஒருவரைக் குறிக்கும் சமத்காரமான சொல்லாகி விட்டது.


அந்த அருமையான சொல்லாற்றல் மிக்க பயில்வான் என்ற பதம், ஒரு சாராரைக் குறிக்கும் சிறு கூட்டுக்குள் அடைக்கப்பட்டுவிட்டதுதான். ஆச்சரியப்படும்படி ஆகிவிட்டது.


பயில் வான் என்ற சொல் எப்படி உருவாகி வந்திருக்கிறது என்று முதலில் பார்ப்போம்.


பயில், பயில்தல், பயிற்றி, பயிற்சி, பயில்வான் என்று தொடர்ந்து உருவாகி வந்திருக்கிறது.