பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

107



பயில் என்றால் பழக்கம் என்றும், சொல் என்றும் பொருள் கூறலாம். பயில்தல் என்றால் பழகுதல், கற்றல், ஒழுகுதல், தேர்ச்சி அடைதல் என்றெல்லாம் பொருள் உண்டு. - -


நீ கற்றுக் கொள், தேர்ந்து கொள், பழகிக் கொள், பழகிய வழி ஒழுகிக்கொள் என்று மக்களுக்கு போதிக்க வந்த அவ்வைப்பாட்டி இந்த சொல்லை எவ்வளவு அழகாகப் பொதித்து வைத்திருக்கிறாள் பாருங்கள்.


சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். எழுதி எழுதிப்பார்க்கும் பழக்கத்தால் எழுத்து சீர்படுகிறது. எண்ணம் செம்மையடை கிறது. பேசிப் பேசிப் பார்க்கப் பார்க்க நா வளமடைகிறது. மொழி திறமடைகிறது.


அப்படிப்பட்ட ஆற்றலைக் கொடுக்கின்ற கல்வியைப் பயிலப் பயில. பழகப் பழக அதில் மனம் தேர்ச்சி அடைகிறது. தெளிவு கொள்கிறது. பொலிவினைப் பெறுகிறது. போற்றுதற்குரிய கலைகளில் பொதிந்து போய் விடுகிறது.


கல்வியில் சிறப்படைய பயிலுதல் அதிகம் வேண்டும். அதாவது தினம் தினம் படிக்க வேண்டும். காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாடுகிறார் பாரதியார்.


கல்விக்குப் படிக்கும் பயிற்சி தேவை. பார்க்காத பயிர் பாழ் படிக்காத பாடம் பாழ் என்பது பழமொழி.


படித்துக் கொண்டே வருவதற்கு அந்தச் செயலைத் தொடர்வதற்குப் பயிற்சி என்றார்கள். பயிற்சி என்றால் என்னவோ ஏதோ என்று பயந்து,விடாதீர்கள்.


பயிற்சி என்றால் பல முறை செய்தல் என்று பொருள். பலகாற் கூறுதல் என்றும் கூறலாம்.