பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

109



பயன்படுத்துகிற விஞ்ஞானிகளே தங்கள் மூளையின் ஆற்றலை 10 சதவிகிதம் தான் பயன்படுத்துகிறார்கள் என்று பேசப்படுகிறது.


அப்படியென்றால் சாதாரண மக்கள், தங்கள் மூளையை எத்தனை சதவிகிதம் பயன்படுத்துகிறார்கள் என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். --


கல்வியானது மனப்பயிற்சியால் வருகிறது என்பதைத் தான் அவ்வையும் மனப்பழக்கம் என்றாள்.


இப்படி தினம் தினம் கல்வியைப் பயில்கிற ஒருவனைத் தான் பயில்பவன் என்று அழைத்தனர். பயில்பவன் என்பவன் நாளாக நாளாக பயில்வான் என்று அழைக்கப்பட்டான்.


கல்வி கற்பவனைப் போலவே, தேகத்தினை நலப்படுத்த, பலப்படுத்த, வளப்படுத்த பயிற்சிகளை மக்கள் செய்து வந்தனர். தேகத்திற்குப் பயிற்சி செய்பவனை, பயிற்சியாளன் என்றனர். பல பயிற்சிகளை தினம் செய்து வந்ததால், அவனையும் பயில்பவன் என்றனர். பயில்கிற அந்த பலவான், பேச்சு சுருக்கத்தால், பயில் வான் ஆகிவிட்டான்.


உடற்பயிற்சி செய்வதை தேகா அப்பியாசம் என்பார்கள். அதாவது தேகத்திற்கு அப்பியாசம் செய்வது என்று அர்த்தம். அப்பியாசம் என்றால் பல காலம் செய்தல், சொல்லுதல் என்றும், பயிற்சி என்றும், பழக்கம் என்று அர்த்தம். அதற்கும் மேலே, அப்பியாசம் என்றால் தொழில் என்றும் அர்த்தம். தொழில் என்பதற்கு திறமை என்றும் சாமர்த்தியம் என்றும் அர்த்தம். ஆகதேகாப்பியாசம் ஒருவன் செய்கிறான் என்றால், அவன் திறமை மிக்கவன், தேர்ச்சி அடைந்தவன் தொழில் வல்லவன் என்றெல்லாம் அர்த்தம் வருகிறது. ஒரு பயில்வானைப் பார்க்கிறோம். பார்த்த இடம் எல்லாம்