பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




விருந்து என்றதும் உங்களுக்குள் உவகையும். உற்சாகமும், உணர்ச்சிப் பெருக்கும் உள்ளச் சிலிர்ப்பும் ஏற்பட்டிருக்குமே!


விருந்து என்ற சொல்லுக்கு அவ்வளவு வேகம் உண்டு. வீட்டிலே விருந்து என்றால், உறவினர்கள் வந்திருக்கின்றார்கள். அன்பான நண்பர்கள் மிகவும் வேண்டப்பட்டவர்கள் வந்திருக்கின்றார்கள். வீட்டிற்கே ஒரு பெருமையை விளைவிக்கும் மேன்மையாளர்கள் வந்திருக்கின்றார்கள் என்றுதான் நினைக்கிறோம்.


வீட்டிலே விருந்து என்றால் அறுசுவை உணவு நினைவுக்கு வருகிறது. ஐம்புலன்களின் ஆசைகளுக்கு பூசை படைப்பது போன்ற பதார்த்தங்களின் பரிவான மணம் பறந்து வருவது போன்ற கனவுகளுடன் நினைவு வருகிறது.


இசையிலே விருந்து என்று இசைவாகப் பேசுகிறோம்.

சொற்பொழிவிலே விருந்து என்று சுகானுபவத்தை பேசுகிறோம்.


இதெல்லாம் இயல்பாக இயற்கையாக, அன்றாடம் வாழ்க்கையிலே ஆர்வம் பொங்கக் காணுகின்ற விருந்துகள் தான்.


இதென்ன விளையாட்டு விருந்து என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுகிறதல்லவா?


இன்றைய விருந்துக்குரிய அர்த்தம் வேறு, அன்று நம் முன்னோர்கள் பேசிய விருந்துக்கு அர்த்தம் வேறு.