பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

117



16. ஐம்புலன்கள்


ஓர் அருமையான ஆய்வு.
இதைத்தான் மெய் கல்வி என்றனர்.
மெய்யறிவு என்றனர்.
மெய்ப்பொருள் என்றனர்
அறிவே இல்லாத நிலையை
அஞ்ஞானம் என்பார்கள்.
கொஞ்சம் அறிவிருந்தால்
அதை எஞ்ஞானம் என்பார்கள்.
விஞ்சிய விரிவான அறிவிருந்தால்
விஞ்ஞானம் என்பார்கள்.
மேன்மையான அறிவிருந்தால் அதை
மெய்ஞானம் என்பார்கள்.
நமது மெய்யைப் பற்றிய ஞானம்
அமுதான ஞானம் - அதுதான்
உண்மையான ஞானம் - வாழ்வுக்கு
நன்மை தரும் ஞானம்
ஓராயிரம் காலம் பாரத்தவமிருந்து
வாராது வந்த மாமணி.
தேமதுரத் தீங்கனீ - நமது தேகம்
இந்தத் தேகத்திற்குத் தான்
எத்தனை பெயர்கள் பெருமைகள்...?