பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




அப்படி இருப்பதுதான் அவைகளுக்கு அழகாக இருக்கிறது. ஏனென்றால், ஆண்டாண்டு காலமாக, மிருகங்களும் மற்ற பிராணிகளும் கோணலும் வளைவும் கொண்டே விளங்குகின்றன. வாழ்ந்து வருகின்றன.

மனிதனும் மரபும்

ஆனால் மனித உடல் எப்படி? நிமிர்ந்த தோற்றம், செம்மாந்த கோலம் கொண்டதல்லவா!

உயிரினங்கள் அனைத்தையும் ஆள்கின்ற ஆற்றல் கொண்ட மனித இனத்திற்கு, அறிவு மட்டும் உதவிவிட வில்லை. ஆற்றலும்தான். அந்த ஆற்றல் நேராக நிற்பதால் தான். நிமிர்ந்து நடப்பதால் தான் கிடைக்கிறது.

எனவே, மனிதனது தோற்றம் தோரணை (Posture) மிக்கதாக விளங்கும் போதுதான் அவனது ஆளுமைப் பண்பு (Personality) அதிகமாக நிற்கின்றது.

மனிதர்கள் ஏன் கோணிக் கொண்டு நிற்கக்கூடாது? கூனிக் கொண்டு நிற்கக் கூடாது? மற்ற உயிரினங்கள் கோணிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு ஒரே விடை: அது என்ன தெரியுமா?

எந்த நிலையிலும் மனிதன் வளையக் கூடாது. குனியக் கூடாது. கூனலாகிவிடக் கூடாது. கோணலாகிப் போய்விடக் கூடாது என்பதுதான். அதுதான் மனித மரபு, மனிதரின் மாட்சி. மனம் கவரும் காட்சி.

கோணலும் கோளாறும்

கோணலாக வளையக் கூடாது என்ற நிலை உயிரினங்களில் இருந்தாலும், கோணலாகி விட்டால் கோளாறு எதுவும் நடந்து விடாது என்பதையே, காலங்காலமாக சான்றுகள் நமக்குக் காட்டுகின்றன.