பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



தெய்வம் குடியிருப்பதால்
தேகம் என்று பெயர்
இன்பத்தை ஆக்கித் தருவதால்
யாக்கை என்று பெயர்.
உலக வாழ்க்கைக்கு உடன்படுவதால்
உடம்பு என்று பெயர்
கலைகள் காய்த்துக் குலுங்குவதால்
காயம் என்று பெயர் (பெருங்காயம்
வென்காயம்) என்றும் பேசுவார்கள்
உயிருக்கு உடையாக இருப்பதால் சிறப்பதால்
உடல் என்று பெயர்.
உண்மையாக கண்ணுக்குத் தெரிவதால்
மெய் என்று பெயர்.
கலகலவென ஒலித்து சிரிப்பதால்,
கடல் என்று பெயர்.
கொள்ளவும் கொடுக்கவும் முடிவதால்
குடம் என்று பெயர்.
மின்னி மினுக்குவதால்
மேனி என்று பெயர்.
சகலத்தையும் தருவதால் இதற்கு சரீரம் என்று பெயர்.
இன்னும் சொன்னால்
இளைக்கும் களைக்கும் மலைக்கும்
இத்தனை இன்பமான தேகத்தை
முயன்று காக்காமல், வளர்க்காமல்
நாயாய் அலைந்து