பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

119



நரியாய் ஒளிந்து
பேயாய் அழித்து
நோயால் அழித்து
சீயென இழிந்து போய்
செத்துத் திரிகின்ற ஜீவன்களாய்.
பித்தரைப் போல
பிதற்றித் திரிகின்ற வாலிபங்களை
என்ன சொல்ல? இதற்குத்தான்
மெய் ஞானம் வேண்டும்.


உடலுக்கு அடிப்படை ஆதாரம் செல்கள். செல்கள் சேர்ந்து திசுக்கள் ஆயின. திசுக்கள் சேர்ந்து, உறுப்புகள் ஆயின. உறுப்புகள் சேர்ந்து மண்டலம் ஆயின. ஒன்பது மண்டலங்கள் உடம்பாய் ஆயின. உறுப்பு, அங்கம், அவயவம், புலன்கள். சிறப்பு அர்த்தம் கொண்ட சிங்கார, சிருங்காரச் சொற்கள் இவை. உறுதியாய் இருப்பதால் உறுப்பு. அழகாகத் தோன்றுவதால் அங்கம். அத்தனை உறுப்புக்களிலும் - மிகவும் சத்தானவை முத்தானவை ஐம்புலன்கள் ஆகும். ஆமாம் கண், காது, மூக்கு, வாய், மெய், ஒளி, ஓசை, நாற்றம், சுவை, ஊறு என்று பேசப்படுகிறது.


நம் உடம்புக்குத் தெரியும். புரியும் எங்கே வளர்வது? எங்கே நிறுத்துவது? எப்படி வளர்வது? எவ்வளவு வளர்வது? கைகால்கள் வளர்ந்தது போல் நமது பற்கள் வளர்ந்திருந்தால் எப்படி இருக்கும்? கைகால் மார்பு பெருத்தது போல நமது கண்கள் பெருத்திருந்தால் எப்படி இருக்கும்? கைகால் விரல்கள் நீண்டதுபோல் நமது மூக்கும் நீண்டிருந்தால் எப்படி இருக்கும்? உடம்புக்குத் தெரியும். உலகத்தில் அழகானதை உருவாக்க வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் ஐம்புலன்களும் அழகானவை. ஒழுங்கானவை ஐம்புலன்கள் இல்லாத தேகம்- அது பிண்டம், முண்டம், தண்டம், கண்டம். - ஆமாம்.