பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



பூரிப்பை காட்டவும், கூட்டவும், ஊட்டவும் கூடிய ஐம்புலன் எல்லாம் செம்புலமாகும்.

ஆனால் சித்தர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு குத்திக் காட்டிய கோலத்தை கேளுங்கள். பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி (கண்) சளியும் நீரும் தவழும் ஒருபொறி (மூக்கு) உமிழ் நீர் கோழை ஒழுகும் ஒருபொறி (வாய்) நீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி (காது), சலமும் சீயும் வளியும் மலமும் வெறுப்படைய வெளிப்படும் ஒரு பொறி (மெய்) உண்மைதான், துடைத்துவிட்டு, அழகைப் படைத்துக் கொண்டு ஆனந்தத்தை அழைத்து கொண்டு ஆற்றலுடன் வாழ்வது நம் கடமை அல்லவா?


ஐம்புலன்கள் இருந்தால் ஆளழகு?
அவற்றில் ஒன்று குறைந்தால் ... சீரழிவுதான்
கண் இல்லையேல் குருடர்
காதில்லையேல் செவிடர்.
வாயில்லையேல் ஊமை
மூக்கில்லையேல் மூக்கறையன்
காலில்லையேல் நொண்டி
நோய்ப்பட்டால் நோயாளி
மூச்சை விட்டால் பாடி...(Body)
ஆகவே தான்
சத்துக் குறைந்தால்
செத்துத் தான் பிழைப்போம்
செத்துப் போவது சத்துப்போவதால்தான்
ஒன்பதாயிரம் சுவை நரம்புகள்
நாக்கிலே உண்டு.
எடுத்ததெற்கெல்லாம் எச்சில் ஊறினால்