பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஊசிக்கே காது வேண்டுமென்றால்
உடம்புக்கு வேண்டாமோ
20,000 சத்தங்களைக் கேட்டு
தெரிந்து தெளிந்து கொள்கிற சக்தி
காதுகளுக்கு உண்டு.
காது கேட்காது என்றால்
கண்டவர் திட்டுவார்...
பேசுவது தெரியும் பேசியது புரியாதே
பாவம் பரிதாபம்.
அறிவின் வாயில், அனுபவத்தின் சாளரம்.
வசீகரத்தை வருவிக்கும் வளாகம்
கண்கள்... காட்சியும் கவர்ச்சியும்
தருகின்ற பண்கள்..
இந்த சின்ன கண்ணுக்குள்ளே
1கோடி கொன் செல்கள். கலர் பார்க்க
125 கோடி ராட்செல்கள் கறுப்பு வெள்ளை பார்க்க
இன்னும் இருக்கிறது சொல்ல நேரம் இல்லையே!
தேகத்தின் பெருமை புரிய
உணர்வோடு வாழ்வோம்
வாழ்வை விருப்புடன் ஏற்று
நாளும் செயலாக்குவோம்
வாரீர்! வாரீர்!