பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

125



இயற்கையெல்லாம் எழிலாகத் தோன்றுவதற்குக் காரணம் அதன் இயல்பான இயக்கம்தான்; என்றும் குறையாத கடமை காக்கும் இயக்கம் தான். - அதை மனிதன் செயல்படுத்த முனைய வேண்டும் என்று குறிக்கத்தான் செயற்கை (செயல்+கை) என்றனர்.

இயற்கையைப் போல உருவம் செய்வது செயற்கை அல்ல. இயற்கையைப் போல இயங்குவது தான் செயற்கை ஆகும். ஆமாம்? மனிதன் தவறின்றி, ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் ஒழுக்கம் காத்திட வேண்டும் என்று சுட்டிக் காட்டவே செயற்கை என்றனர்.

நமது தமிழில், ஒழுக்கமாகவே மனிதன் இயங்க வேண்டும் என்பதற்காகவே, பல இனிய சொற்களையும் நமது முன்னோர்கள் படைத்திருக்கின்றார்கள்.

குனியாமல், நிமிர்ந்து அமர வேண்டும் என்பதற்கு 'இருக்கை என்றார்கள்.

நிமிர்ந்து நடந்து செல்ல வேண்டும் என்பதற்கு 'நடக்கை என்றார்கள்,

படுக்கும் போதும் ஒழுக்கம் வேண்டும் என்பதற்கு 'படுக்கை' என்றார்கள்.

உயர்ந்த ஆடைகளுடன் ஒழுக்கமாக உடுக்கவேண்டும் என்பதற்காக உடுக்கை என்றார்கள்.

இப்படி மனிதன் எந்த நிலையிலும், மனிதன் என்ற தரமான நிலையிலிருந்து மாறிவிடக்கூடாது என்பதிலும், மனிதன் நாளுக்கு நாள் அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்ததாக வேண்டும், என்பதிலும் நமது மூதாதையர்கள் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார்கள்.