பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




18.தமிழும் உடல் நலவியலும்


உடலை வைத்தே உலக வாழ்க்கை அமைந்திருக்கிறது. ஒருவருக்கு உடல்தான் உலகத்தின் முதல் பொருள். மூலப் பொருள். மெய்ப்பொருள். மேன்மையான பொருள்.


உடலுக்கு அடிப்படைத் தேவை நலம், பலம், வளம், வளர்ச்சி, கிளர்ச்சி, எழுச்சி, இவை அனைத்தும் இருக்கிற உடலுக்குத்தான் உடலமைப்புடன் விளங்குகிறவனுக்குப் பெயர்தான் 'மனிதன்’. இல்லையேல் அவன் பெயர் 'கினிதன்’. கினிதன் என்றால் பீடை பிடித்தவன். நோய் பிடித்தவன் என்று அர்த்தம்.


உலகிலே முதன்மை என்று பெயர்பெற்ற, உடலுக்கு உரிய பல்வேறு பெயர்களே, இதன் உன்னத நிலையை விளக்கி காட்டுகின்றன.


உயிருக்கு உடையாக இருப்பதால் உடல் என்றார்கள். ஆசைப்பட்டு வருந்துகிற அமைப்பு என்பதால் 'உடம்பு' என்றார்கள். தெய்வம் வாழ்கிற கோயிலாக இருப்பதால் (தே+அகம்) தேகம்' என்றார்கள்.


தசைகளையும் எலும்புகளையும் நரம்புகளால் இணைத்துக் கட்டி உருவாக்கியிருப்பதால் ‘யாக்கை' என்றார்கள்.


இயற்கையான பஞ்சபூதங்களின் தன்மைகளோடு நிலைபேறு பெற்றிருப்பதால் ‘காயம்’ என்றார்கள்.


வாழும் உயிர்களுக்குள்ளே அழகும் அலங்காரமும் கொண்டு மினுக்குவதால் ‘மேனி’ என்றனர்.