பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

131



எப்பொழுது இருக்கும்? எந்த நேரத்தில் உடையும் என்று தெரியாமல் பயன்படுவதால் ‘தோண்டி’ என்றார்கள்.


இப்படி எத்தனை எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், நம் உடலை பாடி என்றார்கள் சித்தர்கள்.


பேறு, இழவு, தரை, திரை, மூப்பு, சாவு என்னும் உடல் பகை ஆறும், காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாச்சரியம் என்னும் உட்பகை ஆறும் நீங்காது நின்று கொண்டு, பெருந் துன்பத்தை ஒவ்வாது புரிதலால் உடம்பினை 'பாடி' என்றனர்.


மனித தேகத்திற்கு ஆங்கிலத்தில் BODY என்று பெயர்.

B for Blood D for Diet
O for Oxygen Y for Youth

என்று பதம்பிரித்துப் பார்க்கிறோம்.


இரத்தத்தை இறைக்கும் இதயம், காற்றைக் காக்கும் நுரையீரல், உணவைச் சுமக்கும் இரைப்பை மூன்றும்தான், உடலை இயக்கும் உன்னத உறுப்புகளாகும்.


அதையே அழகாக, ஊற்றுப்பை, காற்றுப்பை, சோற்றுப்பை என்பார்கள். இந்த மூன்றும் தான், உடலுக்கு புத்துணர்ச்சியையும், பூரண எழுச்சியையும், பொலிவான வளர்ச்சியையும் அளிப்பனவாகும். அந்தப் பூரணம் பெற்ற உடலுக்கே மெய்ப்பை என்று பெயர்.


உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

(திருமந்திரம் - 794)


உடம்+பை = ஒருசேர பைகளை வளர்த்தேன். அதாவது மெய்ப்பைக்குள்ளே இருக்கும் ஊற்றுப்பை, காற்றுப்பை,