பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



முன்பாக, உடலின் அமைப்பையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.


இயற்கை அமைப்பின் அடிப்படை நிலம். அதற்கு மேலே நீர். நீருக்கு மேலே நெருப்பு. நெருப்புக்கு மேலே காற்று. காற்றுக்கு மேலே வானம் என்ற பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.


இதே அமைப்புதான் உடலுக்கும் பொருந்தி நிற்கிறது. பாதங்களிலிருந்து தொடை வரை உள்ள பகுதி நிலம். வயிற்றுப் பகுதி நீர். நெஞ்சுப் பகுதி நெருப்பு. மிடற்றுப் பகுதி காற்று. நெற்றிக்கு மேற்பட்ட பகுதி வானம்.


தாங்கும் பகுதியான நிலம், ஞானப் பகுதியான வானம் தவிர, உடல் முழுவதையும் ஆள்கின்றனவாக இருப்பவை வெப்பம், வளி, தண்ணீர்.


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று.


இம்மூன்றும் உடலில் மிகினும், குறையினும் நோய் சாடும். வேதனை கூடும். நலம் கெடும் என்கிறார் வள்ளுவர்.


98.4 டிகிரிக்கு மேல் உடல் வெப்பம் ஏறினால் காய்ச்சல், குறைந்தால் குளிர், ஜன்னி வரும்.


காற்று குறைந்தால் உயிர்ப்பு சக்தி அழியும். காற்றாகிய வாயு அதிகமானால் வாய்வுத் தொல்லை.


தண்ணீர் அளவு அதிகமானால் சீதம். குறைந்து போனால் சேதம், உடல் வற்றி வதங்கிப் போகும்.


இந்த மூன்றும் உடலில் அளவாக வைத்திருக்க உதவுவது தான் உடல் நலவியலாகும்.