பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

135



உடல் நலம் காக்க உதவுவது உணவு, உறக்கம், உழைப்பு.


உணவு


உண் + அவு என்று உணவு எனும் சொல் பிரிகிறபோது, ரசித்து விரும்பி உண் என்ற பொருளைத் தருகிறது. (உண்=ரசித்து, அவு=விரும்பி).


ஆனால் மக்கள் எல்லோரும் உணவாக சாப்பிடாமல், சாப்பாடு என்று சொல்லித்தான் சாப்பிடுகின்றனர். சாப்பாடு என்றால் மரண அடி என்று அர்த்தம். சாகடிக்கக்கூடிய பாடுகளைத்தான் சாப்பாடு உண்டாக்குகிறது.


பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்.


'உண்டி சுருங்குகிற உபாயம் பலவுள’ (திருமூலர்). (பிண்டம் என்றால் உடல் சதை. உபாயம் என்றால் இன்பம்).


வயிற்றை நிரப்பிக் கொண்டே இருப்போரின் ஆத்மா வதைபட்டு விதைகிறது என்று பாடுகிறது அறநெறிச்சாரம்.


வயிறு நிறைக்குமேல் வாவின் மிகக்கூறி
செயிரிடைப் பாடெய்துமார் சீவன்.


கொஞ்சமாக உண்ணுங்கள். நிறைய உண்ணலாம் என்று சீனப்பழமொழி சொல்கிறது. அரை வயிற்று அளவுக்கு உண்டால் ஆரோக்கியமாக வாழலாம். அதிகநாள் வாழலாம். அப்பொழுது உண்ணும் அளவு அதிகமாகத்தானே அமைகிறது.


ஒரு மனிதன் ஓராண்டு காலத்தில் அரைடன் (500 கிலோ) உணவு சாப்பிடுவதாக ஒரு கணக்கு. இதற்கும் மேலே டன் அளவு கூடுகிறபோது, எமன் எட்டிப்பார்த்து கை கோர்த்துக் கொள்கிறான்.