பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

டாக்டர். எஸ். நவராஜ செல்லையா



முடியாதே!

நரம்பு கோணிடில் நாம் அதற்கு என்ன செய்வோம் ஐயோ! பாவம் பரிதாபம்! என்று பரிதாபத்துடன் அல்லவா அந்த ஆசிரியர் பாடியிருக்கிறார்.

உடலிலே நரம்பு கோணி விட்டால், உடல் மட்டுமா பாழாகும்? வாழ்க்கையே அல்லவா பாழாகிவிடும்? இந்த உலகம் நரகமாகி அல்லவா போகும்!

ஆகவே தான், நரம்பு கோணிவிட்டால், நால்வகைக் குணங்களும், பத்து வகைப் பண்புகளும், பதினாறு வகை பேறுகளும் பறிபோய் விடும் என்றல்லவா சுட்டிக்காட்டுகிறார்.

நரம்பின் நயம்

நமது உடலில் உள்ள உறுப்புக்களில், நரம்பு மண்டலம் தான் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

நரம்புகள் உடல் உறுப்புக்களிலிருந்து மூளைக் குச் செய்திகளை எடுத்துச் செல்கின்றன. அதனைப் பெற்றுக் கொண்ட மூளையானது தருகின்ற உத்திரவை, குறிப்பிட்ட அவயத்திற்குக் கொண்டு வருவதும் நரம்புகளே!

ஒவ்வொரு நரம்பும், ஒவ்வொரு தசை நுனியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. தசையானது விசை மிகுந்ததாக வலிமையுடையதாக விளங்கும் போது, அதனுடன் ஒப்புக் கொண்டிருக்கும் நரம்புகளும், சுறுசுறுப்புடன், சுகலயத்துடன் பணியாற்றுகின்றன.

வீணையின் தந்திகள் விறைப்பாக இருக்கும் போது தான், எடுப்பான இசை பிறக்கிறது. தந்திகள் தளர்ந்து போனால், அபசுரம் அல்லவா அழுதபடி பிறக்கிறது.

அதே தந்திகள் போல்தான், தேகத்தின் நரம்புகள் தேர்ச்சியுடன் பணியாற்றுகின்றன.