பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம்சிந்தும் விளையாட்டு இன்பம்

13


 எல்லா நரம்புகளும், தண்டுவடத்திற்குள்ளே நுழைந்து தான், மேற்புறமாகச் சென்று மூளைப்பகுதியைச் சேர்கின்றன.

முதுகு வளைந்து போனால், நரம்பு மண்டலமும் அப்படியே தான் ஆகிக் கொள்கின்றது. நேராகச் செல்லும் நிமிர்ந்த நரம்புகள், குனிவதால் ஒடுங்கியும், நசுக்கப்பட்டும், அமிழ்த்தப்பட்டும், இயற்கையாக இருக்கிற ஆற்றலை இழந்து போகக் காரணமாகி விடுகின்றன.


இந்த காரணத்தால்தான், நிமிர்ந்து நிற்க வேண்டும். நிமிர்ந்து உட்கார வேண்டும். நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று எல்லோரையும் வற்புறுத்துகிறோம்.

மாடுகள், மந்திகள், ஆந்தைகள், மற்றும் காட்டு மிருகங்கள் வீட்டுவிலங்குகள் எல்லாமே வளைந்த அமைப்புடையனவாக விளங்குகின்றன என்றால், அவற்றின் பிறவியே அப்படியாக அமையப் பெற்றிருக்கிறது.

ஆனால், மனித இனமோ பரிணாம வளர்ச்சியினால் பக்குவமான படைப்பிலக்கணத்திற்கேற்றபடி, முழுமை பெற்ற அமைப்பாக உடலைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நிமிர்ந்த தோற்றமே மனிதரின் இலக்கணம் என்பதால், அந்த நிமிர்தலினால் விளைகின்ற இன்பமே அதிகம் அதிகம்.

இந்த இனிய விளைவை எண்ணித்தான், நரம் பு கோணிப் போகாமல், நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாடியிருக்கிறார் அந்தப் புலவர்.

நாம் மாடாக உழைக்கலாம். குரங்காகக் குதிக்கலாம். ஆடாக மேயலாம் ஆணையாக அசையலாம். ஆந்தையாக ஓரிடத்தில் அடக்கமாக அமர்ந்திருக்கலாம். ஆனால், கூனாக கோணலாக எப்பொழுதும் இருக்கக் கூடாது என்பது தான்

இயற்கை நமக்குத் தந்திருக்கும் இனிய அறிவுரையாகும்.