பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

15




2. (இல்லாளும் வேண்டாள்)




“கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின் எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வார் - இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்தத் தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாய்ச் சொல்."


பொருளோ பொருள்


பொருள் பொதிந்த பாடல் இது.


பொருள்தான் மக்களுக்குப் புத்துணர்ச்சியும், புதுத்தெம்பும், போற்றுகிற புகழும், பூரணமான மரியாதையும்வழங்குகிறது என்பதாக, இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லி விட்டுப் போனார் ஓர் உரையாசிரியர்.


ஆமாமாம்! பொருள்தான் முக்கியம் என்று போற்றி தலைவணங்கி ஏற்றுக் கொண்டார்கள் பொது மக்களும்.


'பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை, அருளிலார்க்கு அவ்வுலகமில்லை என்று வள்ளுவரும் பாடிவிட்டார் என்று அவரது குறளையும் அங்கே சான்றுக்கு சேர்த்துக் கொண்டார்கள்.


பொருள் என்பது பணம் தானே! பணம் இல்லாதவன் பிணம் பணமென்றால் பினமும் வாயைப் பிளக்கும். பணம் பாதாளம் வரையிலும் பாயும் என்றெல்லாம் துணைப் பழமொழிகளாகத் தொடுத்து தொகுத்துக் கொண்டார்கள்.