பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 உண்மைப் பொருள்


இருந்தாலும், இந்தப்பாடலுக்கு உண்மைப் பொருள் தான் என்ன? கொஞ்சம் இலக்கிய பூர்வமாக அணுகிப் பார்ப்போமே!


இங்கே கைப்பொருள் என்ற வார்த்தையைப் பார்க்கலாம். கைப்பொருள் என்றால், கையிலுள்ள பணம் என்று அர்த்தம் கூறியிருக்கின்றார்கள்.


ஆனால் அந்தச் சொல்லுக்கு உரிய அர்த்தமே வேறுதான். பணம் என்ற அர்த்தத்தில் அந்த புலவர் பாட வேண்டும் என்றால், கைப்பணம் என்றே பாடியிருக்கலாம். எதுகை, மோனை, சந்தம் எதுவும் மாறிவிடப் போவதில்லை.


ஆனால் கை+பொருள் என்று அவர் பாடியிருக்கிறார். பொருள் என்பதை மூலதனம் (Capital) என்று பழங்காலத்தில் கூறுவதுண்டு. பொருள்தான் மூலதனம். அந்த மூலதனப் பொருளை, பொருள் என்று குறிப்பிடாமல் உடல் என்று கூறுகிற கல்வெட்டுச் சொல்லை நாம் ஆராய்ந்து அறியலாம்.


பொருள் என்பதற்கு நாம் தெளிவான உடல் என்றே பொருள் கொள்ளலாம்.


கை என்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்று ஓர் அர்த்தம் உண்டு. தமிழர்த்தம் கற்பொழுக்கத்தில் ஒரு 'பிரிவு கைக்கிளை என்பதாகும்.


ஆகவே கைப்பொருள் என்றால் ஒழுக்கம் உள்ள உடல் என்பது அர்த்தமாகும். ஒழுக்கமான உடலுக்கு வலிமை, வனப்பு, நிமிர்ந்த தோற்றம் நேர்கொண்ட பார்வை எல்லாமே உண்டு.