பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா





வசதியில்லாவிட்டாலும், வலிமையோடு இருக்கிற ஏழையின் மனைவியோ, அவனுக்கு பலவிதமான உபசாரங்கள் செய்து மகிழ்வதையும் நாம் நம் கண்முன்னே பார்க்கிறோம்.


எனவே, மனைவியிடம் மரியாதை வேண்டுகிற எவரும் உடல் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.


வலிமையும் தாயும்


புறநானூற்றில் ஒரு பாடலில் ஒரு இளம் நங்கை சென்று ஒரு தாயிடம் உன் மகன் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று கேட்கிறாள். அவளோ, பெருமையால் பேசுகிறாள்.


'என் மகன் வீரமகன், இப்பொழுது எந்த போர்க் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறானோ? அது எனக்குத் தெரியாது என்றாலும், அந்த புலி வாழ்ந்த குகையாகிய என்வயிறு இதோ என்று கூறிப் பெருமிதம் கொள்கிறாள்.


மரணமடையக் கூடிய வாய்ப்புள்ள போர்க்களத்தில் என் வீரமகன் வெற்றி நடைபோடுகிறான் என்ற வாசகம், மகனின் வலிமையின் மேன்மையை அல்லவா மெருகேற்றிக் காட்டுகிறது!


வீரம் நிறைந்த மகனைப் பற்றி வாய்நிறையப் பேசுகிற தாய்மார்களை நம் வாழ்வில் தினம் சந்திக்கிறோம்;


ஆரோக்கியமான உடம்பைப் பெறாது வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் மகனை எந்தத் தாய் தான் விரும்புவாள்.