பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


முதல்-பொருள்

கைவசம் இருந்து, காத்து நின்று, விருத்தியாகி உதவுகிற முதலாகிய பொருளை, அதிகம் செலவழித்துவிட்டால், அதன் காரணமாக செலவழித்தவனுக்கு ஏற்படும் இன்னல்கள் ஏராளம் ஏராளம்.


அவன் மானமிழந்து போகிறான். மதிகெட்டுப் போகிறான். மாகொடுமை செய்கிற திருடனாக மாறுகிறான். மற்றவர்களிடையே மரியாதையிழப்பதோடு, நல்லோர் களிடையே பொல்லாதவனாகவும் போய் விடுகிறான்.


இந்தப் பிறவியில் மட்டுமல்ல; ஏழு பிறவி எடுத்தாலும் அவன் தீயவனாகவே பிறக்கிறான்.


செல்வத்தைத் தொலைத்து விடுகிற சில்லரை மதியுள்ளவர்களே, இப்படி பலப்பல சித்ரவதைகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள் என்று தான் இதுவரை, இந்தப் பாடலுக்குப் பொருள் கூறி வந்திருக்கின்றார்கள்.


அந்தக் காலத்தில்:


அந்தக் காலத்திலிருந்தே, முதல் என்றால் பொருள் என்றும், உடம்பு என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், பொருள் மேல் மோகங்கொண்ட பேரறிவாளிகள், முதல் என்றால் பொருள் என்றும் பணம் என்றும், செல்வம் என்றுமே அர்த்தம் எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.


மூலதனம் (Capital) என்ற பொருளிலே உடல் குறிக்கப்பட்டிருக்கிறது. கல்வெட்டுக்களில், மிக அழகாக அந்த வார்த்தைப் பொறிக்கப்பட்டிருக்கிறது.