பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பணம் இருக்கிறவரை மனதில் தெம்பு உண்டு என்பதுபோல, தேகம் தெம்புடன் இருக்கும்வரை நடையில் வலிவு உண்டு. முகத்தில் பொலிவு உண்டு. செல்லும் வழியிலும் செய்கிற சிந்தனையிலும் தெளிவு உண்டு.


நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிற பணத்திற்கு, வளர்ச்சி உண்டு. பெருக்கம் உண்டு. அதையே அறவழியில் பொருளீட்டல் என்று அழைக்கின்றார்கள்.


தீய வழிகளில் வருகிற பணமும், பெறுகிற பணமும், தீங்கையே உண்டாக்கும். தீய முடிவுகளையே வரவழைக்கும்.


அதுபோலவே, நல்ல வழியில் உடலைப் பயன்படுத்து கிறபோது செய்யும் தொழில் சிறக்கும். சேரும் இடமும் சிறக்கும். பெறுகிற மனமும் சிரிக்கும். எதிர்காலமும் புகழில் திளைக்கும். அமைதியில் நிலைக்கும்.


தீய வழிகளில் உடலை செலுத்துகிறபோது, தேகமும் கெடுகிறது. திகைத்துப் போகின்ற மனமும் சுடுகிறது. படுகிறது உடைந்து போகிறது.


நமது பணி என்ன?


செலவழிப்பது என்று சொல்கிறபோது, எல்லோரும் பணத்தைத் தான் நினைக்கின்றார்கள். உடலைப் பற்றி நினைப்பதில்லை.


செலவு செய்வதை நமது முன்னோர்கள் அழிவு என்று கூறியிருக்கின்றனர்.


செலவை வரமுறையோடு செய்கிறபோது, போற்றி ஏற்றுக் கொள்கிறோம்.


செலவை தேவையில்லாமல் செய்கிறபோது அது அழிவுக்கே அழகாக நடத்திச் சென்று விடுகிறது.