பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

33



கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு மிருகங்களான ஆடு மாடுகளுக்கு, நாள் தோறும் நீண்ட கழிகளை வைத்துக் கொண்டு, கிளைகளை வளைத்து, முடிந்தால் ஒடித்துக் கீழே தள்ளி, தின்னுவதற்காகத் தந்தனர்.


இப்படி தினம் தினம் ஆடுமாடுகளை வளர்க்கும் இடையர்கள், ஒடித்துத் தள்ளுவதால் ஏற்படுகின்ற விளைவுகளைத்தான் பழமொழி ஒன்று இப்படி கூறுகிறது.

அதாவது இடையன் ஒடித்த மரம் என்று.

இடையன் எறிந்த மரம் என்று

தினந்தினம் கொத்துக் கொத்தாக, கிளைகிளைகளாக, ஒடித்துத் தள்ளப்படுவதால், மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக, எல்லாவற்றையும் இழந்து, பெயரிழந்து போய்விடுகின்றன. மரத்தை ஒடித்தே இடையன் அழித்து விடுகிறான்.

காற்றில் அசைந்து, காண் பார்க்குக் களிப்பூட்டும் இலை, தழை, கிளை எல்லாவற்றையும் இழந்து, கட்டைமரம், பட்ட மரம், மொட்டைமரம், பாழான மரம் என்பதாகவே பெயரிழந்து நிற்கின்றன.

இதனால் தான், இந்தப் பழமொழி, இடையன் எறிந்த மரம் என்று, இயல்பாக நடக்கும் கொடுமையான காரியத்தைமிகக் கூர்மையாகச் சித்தரித்துக் காட்டுகிறது.

மரமும் உடலும்

மரத்தை போல்தான் உடலும்.

உலக வாழ்க்கையில், குறிப்பறியாமல் நிற்கின்ற ஒரு வரைப் பார்த்து நல்ல மரம் என்று உவமானம் கூறி, அவன் மதிப்பைக் குறைத்துப் பேசுகின்றார்கள் கவிஞர்கள்.