பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

37


நடந்துபோன பாதையைப்பார்த்தால் ஏதோ கோடு போலத் தோன்றும்.

அதுபோடுகிற கோடுகள் எல்லாம் கோலம் ஆகுமோ! தரையில் கிழிக்கப்படுகிற அந்தக் கோடு எல்லாம் எழுத்து ஆகிவிடுமோ! என்கிற இந்தக் கருத்தை 'நத்தை இழுக்கிற கோடு கணக்காவதில்லை, எழுத்தாகி விடுவதில்லை’ என்கிற பாட்டைக் காண்போம்.

ஆகுமோ, நந்துழுத எல்லாம் கணக்கு (நந்து-நத்தை)

நத்தை கிழிக்கும் கோடுகளானது விரைவில் மறைந்து போவது போல, தேகத்தின் சக்தியை இழந்த மக்களின் நிலையும் ஆகிவிடுகிறது.

இதற்கு ஒரு தீர்வு

அப்படியென்றால், தேகத்தின் சக்தியை அழிக் காமலேயே, நாம் வாழ்ந்துவிட முடியுமா என்ற ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம்.

தேகத்தை இயக்காமல், சக்தியை இழக்காமல், எந்தக் காரியமும் செய்ய முடியாது என்பதை, நாம் எல்லோரும் நன்றாகவே அறிவோம்.

இந்த ஒரு கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். போதும்.

பையச் சென்றால், வையம் தாங்கும் (ஒளவையார்)

சக்தியை இழக்கின்ற காரியங்களில் அவசரப்படாமல், ஆத்திரப்படாமல், யோசித்து செயல்படுகிற விதத்தில், அமைதி காப்பது போல், மெதுவாகச் (பைய) சென்றால், இந்த உலகம் உங்களை நீண்ட நாள் தாங்கி வாழ்விக்கும் என்பது தான் இதன் கருத்து.