பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதமை அல்லது ஊதியம் இல் என
முன்னும் அறிந்தோர் கூறினர், இன்னும்
அதன்திறம் அத்தை யான் உரைக்க வந்தது

(புறம் - 28)

மக்கள் பிறப்பிலே நிறைய குறைபாடுகள் உள்ளன. அவை எட்டு வகையாக இருக்கின்றன. அவை பின்வருமாறு;

கண் குருடு (சிதடு); வடிவமில்லாத தசைத்திரளினால் ஆன உடல் (பிண்டம்), கூன் விழுந்த முதுகு (கூன்), குறுகிய குள்ளமான அமைப்புள்ள உடல் (குறள்), வாய் பேசாத ஊமை (ஊம்), காது கேளாத தன்மை (செவிடு), மிருகம் போன்ற உடலமைப்புடன் உள்ள உடல் (மா), அறிவற்ற மந்த புத்தியும், பைத்தியக்காரத்தனமும் நிறைந்ததன்மை (மருள்).

இப்படி உள்ள உடல்களால், அறம், பொருள், இன்பங்களை அனுபவிக்கமுடியாமற் போய்விடும் என்பதை நாம் அறிந்தது தான்.

இத்தகைய குறைகள் இல்லாமல், சோழன் நலங்கிள்ளி இருந்தான், என்று புலவர் பாடிய பாடல் நமக்குக் கூறுகிறது.

திருமூலரின் மகிழ்ச்சி

அதனால்தான், திருமூலர் மகிழ்ச்சியாக இப்படிப் பாடுகிறார்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்.

எந்த விதக் குறைகளும் இல்லாமல், என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன் என்று மகிழ்ச்சி பொங்கப்பாடுகிறார்.