பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

43


உடலில் குறையற்ற நிறைவு; உள்ளத்தில் வெறுமையற்ற உணர்ச்சி ஊற்று; செயலிலே சிரத்தையான செழிப்பு; இவை தான், திருமூலரைப் பூரிப்படைய வைத்திருக்கின்றன.

குறைவு பெறாத உடலுறுப்புக்கள் மட்டும் ஒருவருக்கு மகிழ்ச்சி தராது. கூடிவருகிற அறிவும், மனத் தெளிவும், மாண்பு மிகுந்த ஞானமும் வேண்டுமல்லவா!

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கத்தில் உள்ள எழுத்தும் வடிவமும் தெளிவாக இருந்தால் தான், அது செல்லுபடியாகும். ஏதாவது ஒரு பக்கம் தேய்ந்து, மறுபக்கம் நன்றாக இருந்தாலும், அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பணயமான வாழ்வு

அது போலவே, உடல் நன்றாக இருந்து அறிவின்றி போனாலும், அறிவு மிகுந்திருந்து உடல் நலிவுற்றுக் கிடந்தாலும், அப்படிப்பட்ட ஆட்களை யார் மதிப்பார்கள்?

அறிவில்லாதவர் மரம் போன்றவர். ஆற்றலில்லாதவர் உருவம் இருந்து என்ன பயன் என்றெல்லாம் வள்ளுவர் பாடுவார்.

இதனால்தான், என்னை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான், என்று இதயம் கனிந்து திருமூலர் பாடுகிறார்.

குறையிலா உடலைத் தந்தாய்!
குறைவிலும் நிறைவைத் தந்தாய்!
மறைபொருள் உணரும் வண்ணம்
மாண்புடன் மதியைத் தந்தாய்!