பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

47


நரம்பில்லாத நாக்கு

நரம்பில்லாத நாக்கு என்று எல்லோரும் ஏளனமாகப் பேசுகின்ற இந்த நாக்கு, தசையால் தான் அமையப் பெற்றிருக்கிறது.

நாக்கிற்கு நுனி, உடல், அடி என மூன்று பகுதிகள் உண்டு. நாக்கின் நுனிப் பாகமும், மத்தியில் உள்ள உடல் பாகமும் எலும்புடன் இணையாமல், சுதந்திரமாக உலவுவது போல் அமையப் பெற்றிருக்கிறது. நாவின் அடித்தளம் தான், ஹையாய்டு எனும் எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது

இது நாவின் இயற்கை அமைப்பாகும்.

நாக்கின் பயன்கள்

நாக்கின் மேற்பரப்பில் நிறைந்து தெரிகின்ற காம்பு போன்ற அரும்புகள், பைலி பார்ம், வல்வேட், போலியேட் என்று நான்கு வகைப்பட்டவையாயிருக்கின்றன.

நாக்கின் ஓரங்களில் காணப்படும் பைலிபார்ம் என்ற அரும்புகளுக்குத் தொடு உணர்வு உண்டு. வெல்வெட் போன்று, அமைப்பு கொண்ட நமது நாக்குக்கு சுவை உணர்வு உண்டு.

கையினால் பொறுக்க மாட்டாத சூட்டையும், குளிர்ச்சியையும், வாய்ப்பகுதி தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் நமக்குத் தெரியும்.

ஆகவே, நாவானது உண்ணும் உணவின் சுவை அறிய உதவுகிறது.

உண்ணும் உணவுப் பொருட்களை, நன்கு கலக்கித் தொண்டைக்குள் அனுப்பவும் துணைபுரிகிறது.