பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

49


சுளிக்கச் சொல்லேல்.
நொய்ய உரையேல்.
பழிப்பன பகரேல்
பிழைபடச் சொல்லேல்
வெட்டெனப் பேசேல்

என்றெல்லாம், பேச்சுக்குத் தரம் சொல்லி போயிருக்கிறாள்.

இனிமையான பேச்சு கனி போன்றது. இன்னலைத் தருகின்ற பேச்சு காயைப் போன்றது. கனிகள் கண்ணருகே, கையருகே பறிக்கும் அளவுக்கு இருக்கிறபோது, காயைப் பறித்து யாராவது சாப்பிடுபவர் உண்டோ! அப்படி உண்பவரை உலகம் பழிக்காதா!

'கனியிருக்கக் காய் கவர்ந்தற்று' என்று சுவையாகப் பாடிய வள்ளுவர், எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கையை விடுத்துப் பாடிச் சென்றிருக்கிறார்.

அந்தப்பாடல் வாய்க்கு மட்டுமல்ல. வாழ்வுக்கே விடுத்த எச்சரிக்கையாகும்.

யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

யாரும் எதைக் காப்பாற்றா விட்டாலும், நாக்கைக் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். அப்படிக் காக்கத் தவறினால், அவர் சொல் தவறிப்பேசி, சோகமான சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும் என்பது பொருளாகும்.

பொருள் புதிது

இதுவரை, நாகாக்க என்ற சொல்லுக்கு, நாவைக் கொஞ்சம் அடக்கி வையுங்கள், இல்லையேல் இழுக்குபட்டு அதாவது சொற்குற்றம் ஏற்பட்டு, சோகாப்பர் அதாவது துன்பம்