பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஜீரணமும் காரணமும்

வயிற்றுக்குச் சென்ற உணவுப் பொருள், செரித்த பிறகுதான் உண்ண வேண்டும் என்பது நியதி. அதுவே மீறாத விதிமுறையுமாகும்.

உணவு செரிக்காமல் இருக்கும் பொழுது. ஆசையின் காரணமாக, ஆவேசத்துடன் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால், வயிற்றுக்கு அது தீராத சுமையாகி விடுமல்லவா!

அதிகக் கனமாகி விடுகின்ற வயிற்றுச் சுமைக்குள் உள்ள உணவுப் பொருட்கள், குறிப்பிட்ட அந்த மூன்று மணி அவகாசத்திற்குள் இரைப்பையிலிருந்து வெளியேற முடியாமல் போகின்றன.

ஜீரண உறுப்புக்களுக்கு இயலாமை ஏற்பட்டு விடுகின்றன. அதனால், வயிற்றுக்குள் தேங்கிப் போய் நிற்கின்றன.

வயிற்றில் உள்ள தேக்கத்தின் அடுத்தக் கட்டம், அஜீரணத்தின் முடிவு மலச்சிக்கல்.

மலச்சிக்கல் சிக்கலான வேதனையுடன் மூலம் (Piles) என்ற கடுமையான நோயையும் கொண்டு வந்து விடுகிறது.

மூலநோயே, உடலில் தோன்றும் பல நோய்களுக்கும் மூலமாகி விடுகிறது என்பது மருத்துவர்கள் கூறும் காரணமாகும்.

பல்லும் பழுதும்

உணவின் சுவையறியும் நாவுக்கு, உதவுகின்றவையாக பற்கள் விளங்குகிறது.