பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காலமும் நேரமும்

சூரியன் தருகிற ஒளியின் மூலம், வீரியம் பெறுகின்றன உயிர்கள் என்பதை நாம், விரிவாக அறிந்து கொள்வதற்கு முன்னே, நாம் வாழ்கின்ற வாழ்நாளின் எண்ணிக்கையை, கணக்கிட்டுக் காட்ட சூரியன் உதவுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சூரியன் காலையில் தோன்றி, மாலையில் மறைந்து, மீண்டும் தோன்றும் நேரத்தைத் தான் ஒரு நாள் என்று கணக்கிடுகின்றோம்.

சூரியன் மறைகின்ற நேரத்தை ஏற்பாடு (சாயங்காலம்) என்பார். முற்பாடு என்றால் சூரியன் தோன்றும் காலை நேரம் என்றும் நாம் கூறலாம்.

நாட்கள் மாதமாகின்றன. 12 மாதங்கள் ஓர் ஆண்டு ஆகிறது.

சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் வந்து தங்கிச் செல்கிறது. அந்த ராசிகள் 12. அவை பின்வருமாறு.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பனவாகும்.

சூரியன் 12 மாதங்களில், ஒரு முறை மேஷ ராசியில் புகுவதை முன்னிட்டே, ஆண்டு என்று காலக் கணக்கிட்டுச் சோதிடர்கள் கூறுவர்.

இந்த ஆண்டு என்ற சொல் எப்படி வந்தது என்றால், ஆட்டு என்ற சொல்லிலிருந்து.