பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

59


ஆட்டு என்ற சொல், மேஷம் என்ற ராசியின் தமிழ்ச் சொல் ஆடு என்பதிலிருந்து வந்திருக்கிறது. (மேஷம்-ஆடு)

பனிரெண்டு ராசிகளுக்கும் சூரியன் சென்று வரும் காலத்தைக் குறிக்க, ஆட்டு ராசியில் கூறவே, அது ஆட்டு என்று தொடங்கி, ஆண்டு என்று மாறி மருவி வந்திருக்கிறது.

ஏழரை ஆண்டுகள் சனி பிடித்து, துன்பம் தொடர்வதாக இருக்கும் என்பதை, ஏழரை நாட்டுச் சனி என்று சோதிடர்கள் கூறுவார்கள். அந்த ஏழரை ஆண்டுகாலம், ஏழரை ஆட்டுச் சனி என்று தான் ஆதிகாலத்தில் பேச்சும் பழக்கத்தில் இருந்ததாக தமிழண்ணல் என்பவர் கூறுகிற கருத்தையும், நாம் கவனத்தில் கொள்ளலாம்.

வழியும் வலிமையும்

வாழ் நாட்களுக்குரிய வழியையும் காலத்தையும் காட்டுகிற சூரியன், மக்களுக்கு வலிமையையும் வழங்குகிறான் என்றால், அது எப்படி? என்று ஆச்சரியமாகக் கேட்கத் தோன்றகிறதல்லவா!

மனிதருடைய தேகவலிமை, அவரது எலும்பில்தான் அமைந்திருக்கிறது.

இந்தக் கருத்தை இன்னும் சற்று விவரமாகக் காண்போம்.

இரத்தம் இருக்கும் விதமும், அதன் ஒட்ட வேகமும் இருக்கும் செழிப்பு பற்றியே, அந்த உடலும் அமைந்திருக்கும் என்பதை நாம் நன்றாகவே அறிவோம்.

இரத்தம் சிவப்பாக, செழிப்பாக, இருக்கிறதென்றால், அந்த இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களே காரணமாகும்.