பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சிவப்பணுக்கள் வலிமையுடையனவாக இருந்தால் இரத்தம் அடர்த்தியாக, ஆர்ப்பரிக்கும் சக்தி நிறைந்ததாக இருக்கும்.

இந்த சிவப்பணுக்கள் எங்கே இருந்து தோன்றுகின்றன?

எலும்புகள் இரண்டு சேர்ந்து, ஓரிடத்தில் இணைகின்ற மூட்டுப் பகுதியிலிருந்து (Joints) தான்.

எலும்பு மூட்டுகளில் எலும்புச் சோறு (Marrow} என்ற பகுதியிலிருந்து தான், சிவப்பணுக்கள் பிறக்கின்றன.

எலும்புகள் வலிமை கொண்டதாக இருந்தால் தான். அதிலிருந்து தோன்றுகிற சிவப்பணுக்களும் வலிமை கொண்டனவாகப் பிறக்கும்.

ஆக, எலும்புகளுக்கு வலிமை வேண்டும் என்பது நமக்குப் புரிகிறது.

ஆனால், எலும்புகளின் உறுதிக்கும் வலிமைக்கும். வேண்டிய சக்தி யாது? கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்து.

இந்தக் கால்சியச் சத்துதான் உடல் எலும்புகளை வலிமையாக்குகிறது.

அந்த சத்தினைத்தான், அறிவியல் உலகம் D வைட்டமின் என்று புகழ்ந்துரைக்கிறது.

இந்த D வைட்டமினுக்கும், சூரியனுக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் இப்போதைய வினாவாக எழுந்தருளியிருக்கிறது.

சூரிய ஒளி

சூரியனிடமிருந்து பூமியை நோக்கி வருகிற ஒளியானது, பூமியில் மூன்று பிரிவாகப் பிரிந்து செயல்படுகிறது.