பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



8. வெறும் பானை பொங்குமோ மேல்


உணவும் நினைவும்

உணவை சமைக்க உதவுகிறது பானை
உணவை சமைக்க உதவுகிற உதவிப் பொருட்களும் பல

பொருட்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதால் மட்டும், பலன் ஏதும் விளைந்து விடுவதில்லை. உணவும், உண்ணுவதற்கு ஏற்ற நிலையில் அமைந்து விடுவதில்லை.

பானையைப் பத்திரமாக, பாதுகாப்பாக வைத்திருக்க அடுப்பு வேண்டும். பானையில் உணவுப் பொருள்வேக, தண்ணீர் வேண்டும். அவற்றை சமைக்க அனலும் வேண்டும்.

இவையெல்லாம் சேர்ந்து செயல்பட்டால்தான், பானையும் பொங்கும், பதமான உணவும் வந்து சேரும்.

இவ்வாறெல்லாம் இல்லையென்றால், வாய் வீரப்பேச்சும், தானென்ற செருக்கும், தன்மையில்லாத திமிரும், தடித்தனமான செயல் முறையும் எந்தவித பலன்களையும் அளித்துவிடப் போவதில்லை.

அதனால்தான், 'வெறும் பானை பொங்குமோ மேல்.’ என்று ஒளவைப் பாட்டி அழகாகப் பாடிச் சென்றிருக்கிறாள்.

இந்த ஒரு வரியானது, நமது விளையாட்டுத்துறைக்கு எப்படியெல்லாம் பொருந்தி வருகிறது, புத்திமதியை வழங்குகிறது என்று நான் எண்ணிப்பார்க்கிறேன்.