பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

69


மாம்பழத்தை உண்ண வேண்டும் என்ற ஆசை எழுகிறது. அருகில் இருந்து, பழம் பறித்துத்தர ஆட்கள் யாரும் அங்கில்லை.

அவனது ஆசை அவனை ஆவேசப்படுத்துகிறது. தனக்கு மாம்பழமே வேண்டும் என்று ஆத்திரப்பட்ட அவனது மனம், மாம்பழத்தை தடியால் அடித்து மண்ணில் வீழ்த்தி எடுத்துத் தின்ன வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறது.

உடனே, தன் கைத்தடியை எடுத்து மரத்தை நோக்கி வீசுகிறான்.

கைத்தடி பறந்து மாம்பழத்தின் மீது படாமல், எங்கேயோ போய் விழுகிறது. மாம்பழமும் விழவில்லை. கைத்தடியும் கிடைக்க வில்லை. குறியில்லாமல் எறிந்ததால், இரண்டுமே போய், தடுமாறி தவித்து, தத்தளித்து நிற்கிறான் அந்த விழியிழந்த மனிதன்.

கண் இல்லான்
மாங்காய் விழஎறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

(நல்வழி என்னும் பாடல் தொகுப்பில் நான்காவது பாடல் இது)

நடந்து விளையாட்டுத் துறைப் பக்கம் வருவோம்.

விளையாட்டுப் போட்டிஎன்கிற மாந்தோப்பில், வெற்றி என்கிற மாங்கனி தொங்கிக் கொண்டிருக்கிறது.

நமது விளையாட்டு வீரர்கள், வெற்றி என்னும் மாங்கனியைப் பற்றியும், அதன் ருசி, மணம், குணம் பற்றியும் மட்டுமே கேட்டுத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

ஆனால், அதை அடையக் கூடிய முறைகளும், நெறிகளும் என்னவென்று புரியாமல், கிடக்கின்றார்கள்.