பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

71



தன் முனைப்பு, தியாகம், இலட்சிய நோக்கம், சதா உழைப்பு, சக்தியை வளர்க்கும் திட்டம், சமத்காரமான காரியங்கள்.

இப்படியே அவர்கள் வளர்ந்து, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, வெற்றியடைகின்றார்கள், சாதனை புரிகின்றார்கள். சரித்திரம் படைக்கின்றார்கள்.

அந்த சாதுர்யம் இன்னும் நம் நாட்டு வீரர்களுக்கு வரவில்லை.

ஆசை இருக்கிறது ஆனைமேல் சவாரி செய்ய... ஆனால், எப்படி ஆனைமேல் ஏறுவது என்று தான் தெரியவில்லை என்கிற பழமொழி, இங்கு சரியாகத்தான் இருக்கிறது.

வழிகாட்டுகின்ற தலைவர்களுக்கோ குழப்பம். வழி நடக்கும் வீரர்களுக்கோ மயக்கம், தயக்கம்.

இப்படித்தான் மாங்கனியை அடிக்கின்ற குருடன்போல, நாம் விளையாட்டுத் துறையில் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

வெறும்பானை பொங்குமோ மேல் என்று பாடிக் கொண்டிருக்கிறோம். பாடுகிறவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாட்டும் கருத்தும் நமக்குப் பயன்பட்டால் சரி!